ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய 29ந்தேதி வரை தடை: டில்லி உயர்நீதி மன்றம்

டில்லி:

ஊழல் புகாரில் ஈடுபட்டுள்ள சிபிஐ யின் சிறப்பு இயக்குனர் ராக்கேஷ் ஆஸ்தானவை கைது செய்ய வரும் 29ந்தேதி வரை  தடை விதித்து   டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

கருப்பு பண மோசடி தொடர்பாக ஐதராபாத்தைச் சேர்ந்த சதிஷ் சனா என்ற தொழிலதிபரிடம் நடைபெற்று வரும் விசாரணையின்போது,   இடைத்தரகர் மூலம் சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த அஸ்தானா லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அஸ்தானா மீது லஞ்ச புகார் கூறி, எப்.ஐ.ஆர் பதிவு செய்தது சிபிஐ.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, அஸ்தானா உடன்  பணிபுரிந்து வந்த  சிபிஐ அதிகாரி தேவேந்திர குமாரை, சிபிஐ கைது செய்தது. தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளின் அறைகள் சோதனையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ராகேஷ் அஸ்தானாவிடம் இருந்து பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டன. இந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவிய நிலையில், அவர் சார்பில்  டில்லி உயர்நீதி மன்றத்தில், கைது செய்ய தடை கோரி  அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த  வழக்கின் விசாணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராகேஷ் அஸ்தானாவை வரும் திங்கட்கிழமை வரை கைது செய்ய தடை விதித்தும், வழக்கின் விசாரணையை 29ந்தேதிக்கு ஒத்திவைத்தும்  டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.