எங்க வயித்துல அடிக்காதீங்க!: ஊருக்கெல்லாம் உணவு கொடுக்கும் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

ந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக ஸ்விகி நிறுவன ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆன்லைன் உணவு வர்த்தகத்தின் முன்னணி நிறுவனங்கலில் ஒன்று ஸ்விகி. அதாவது சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்போ, தங்களது வீட்டில் இருந்தே தேவையான உணவுகளை ஆர்டர் செய்யலாம். அவர்களுக்குப் பிடித்த உணவங்களில் விரும்பிய உணவு வகைகளை. வீட்டிற்குகே வந்து தருவார்கள் ஸ்விகி ஊழியர்கள்.

போராட்டம்

பெரு மழையோ, கடும் வெயிலோ, போக்குவரத்து நெரிசலோ.. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இரு சக்கரவாகனத்தில் பறந்து பறந்து வந்து உணவு அளிப்பார்கள் இந்நிறுவன ஊழியர்கள்.

பெரிய உணவகங்களில் இருந்து வகை வகையான உணவுகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கும் இவர்கள் நிலை பரிதாபம்தான். சமீபத்தில் இவர்களில் சிலர் சாலையோர கடையில் நின்றுகொண்டே உணவருந்திய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

தவிர, இவர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.  அதாவது அவர்கள் செய்யும் டெலிவரியை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள் ஸ்விகி ஊழியர்கள்.

“1. முதல் ஆர்டருக்கு 45 ரூபாயும் இணைப்பு ஆர்டருக்கு 25 ரூபாய் கொடுக்க வேண்டும்.
2. குறைக்கப்பட்ட மாதம் மற்றும் வார இறுதி (சனி, ஞாயிறு) ஊக்கத்தொகையை மீண்டும் உயர்த்தப்பட வேண்டும். 3.ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் முதல் மைல் கடைசி மைல் என சரியான தொகையை வழங்க வேண்டும்.
4. ஆர்டரின் போது ஏதேனும் பிரச்சனை என்றால் hubயை தொடர்பு கொள்ள மேலும் பல தொலை தொடர்புகளை இணைக்க வேண்டும்.
5. இரவு நேர காவல்துறையின் வீண் கெடுபிடிகளை தடுக்க அவர்களிடம் ஸ்விகி தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்..”

சமீபத்தில் வைரலான புகைப்படம்

ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாறு மண்டல ஸ்விகி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அடையாறு ஸ்விகி கிளையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

போராட்டம்

ஸ்விகி ஊழியர்கள் தரப்பில், “பேச்சுவார்த்தை முழுமையாக நடைபெறவில்லை. ஊருக்கெல்லாம் உணவு அளிக்கும் எங்கள் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்? எங்களுக்கான ஊதியம் மிக மிகக் குறைவாக உள்ளது. பேச்சு வார்த்தை  தோல்வி அடைந்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்கள்.

#Donotbeat #our #Stomach: #swiggy- #employees #announced #srike

 

 

 

You may have missed