கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்….ஸ்டாலின்

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று முதல் உடல் நிலை நலிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை முதல் சமூக வலைதளங்களில் கருணாநிதி உடல் நிலை குறித்து சில தகவல்கள் வதந்திகளாக உலா வந்தன. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் உருவானது.

இதையடுத்து வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘கருணாநிதிக்கு 24 மணிநேரமும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அவரை சந்திக்க வருவதை பொதுமக்களும், தொண்டர்களும் தவிர்க்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.