நெல் ஜெயராமன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்!: பி.ஆர்.பாண்டியன்

புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமன் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பி.ஆர். பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகைகளை பிரபலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டு வருவபர் ஜெயராமன்.

இவர் புற்று நோயால் தாக்கப்பட்டு,  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக  அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சேவை அமைப்பினர் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு தொகுதியில் ஆதிரங்கம் என்ற சிறிய கிராமத்தை  சேர்ந்தவர்  ஜெயராமன்.  விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும் அவற்றை இயற்கை முறையில் எதிர்கொள்ளும் விதங்களையும் விசாயிகளுக்கு தொடர்ந்து பயிற்றுவித்து வந்தார்.

இதற்காக பல விருதுகளை பெற்றுள்ள இவர்,  2011 ஆம் ஆண்டில், கரிம வேளாண்மைக்கு  செய்துள்ள பங்களிப்பிற்காக சிறந்த கரிம விவசாயிக்கு மாநில விருதைப் பெற்றார்.  மேலும் 2015 ஆம் ஆண்டில் சிறந்த மரபணு ரட்சகராக தேசிய விருது பெற்றார்.

அதைத்தொடர்ந்து,   தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகைகளை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் கிரியேட் (CREATE)  எனப்படும் நுகர்வோர் அடிப்படையிலான அமைப்பின் பயிற்சி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.  இது நமது நெல்  என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்றதில் அவரது பங்கு முக்கியமானது.

இந்த நிலையில், அவரைப் பற்றி சில ஊடகங்களில் அதிர்ச்சிதரத்தக்க தகவல் வெளியானது. இதையடுத்து,  சமூகவலைதளங்களில்  பலரும் வருத்தம் தெரிவித்து பதிவிட்டனர்.

இந்த நிலையில் விவசாயிகள் சங்கத்தின் பி.ஆர். பாண்டியன், “நெல் இரா.ஜெயராமன் கவலைக்கிடமாகத்துன் உள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம். ,அமைச்சர்கள் ஆர்.காமராஜ், துரைக்கண்ணு மருத்துவமனைக்கு நேரில் சென்று முதலமைச்சர் சார்பில் மருத்துவ சிலவிற்காக ரூ 5.00 லட்சம் நிதியை வழங்கி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடமும், “ஜெயராமன் கவலைக்கிடமாக இருக்கிறார். விரைவில் நலம் பெற  வாழ்த்துவோம்” என்று பாண்டியன் தெரிவித்தார்.

#rumors #nellJayaraman:#p.r.pandian