வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ அறிவிப்பு!

முதல்வர் ஜெயலிதா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ அறிவித்து உள்ளது.

முதல்வர் காலமானார் என்று பிரபல செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அப்பல்லோ உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதல்வர் இறந்ததாக செய்தி வெளியிட்டதும், அதிமுக தலைமை அலுவலகத்தில்  அ.தி.முக. கொடி அரைக்கம்பத்தில் கட்டப்பட்டது.

.ஆனால் அது போன்ற தகவலை நம்ப வேண்டாம் என அப்பல்லோ அறிக்கையில் கூறி உள்ளது. தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்து குழுவுடன் இணைந்து முதல்வரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

appolo-wrong