‘வதந்திகளை நம்ப வேண்டாம்:’ அடுத்த வாரம் வங்கிகள் செயல்படும்! நிதி அமைச்சகம் விளக்கம்

டில்லி:

டுத்த வாரம் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது… விடுமுறை என சமூக வலைதளங்களில் ஊடகங்களில் செய்திகள் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவிவருவது வதந்தி, வங்கிகள் இயங்கும் என மத்திய  நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

பொதுவாக வங்கிகளுக்கு பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில்விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த நிலையில்,   செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதி சனி ஞாயிறு வருகிறது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 3 திங்கட்கிழமை ஜன்மாஷ்டமி வருகிறது. அதைத்தொடர்ந்து4 மற்றும் 5 தேதிகளில் ஆர்பிஐ ஊழியர்கள் வேலை நிறுத்தம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வங்கி சேவை பாதிக்கப்படும் என வதந்திகள் பரவின. மாதத்தின் முதல் தேதிகளில் சம்பள பட்டுவாடா நடைபெறும் என்பதால் வங்கிகள் தொடர் விடுமுறை என வதந்திகள் பரவியதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து,  மத்திய நிதியமைச்சகம், செப்டம்பர் 8 ஆம் தேதி (2-வது சனிக்கிழமை) தவிர அடுத்த வாரம் முழுவதுமே வங்கிகள் செயல்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பி.எப் மற்றும் ஓய்வூதிய பிரச்னை காரணமாக ஆர்.பி.ஐ ஊழியர்கள் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று  சமூக வலைதளங்களில் பரவிவருவது வதந்தி என நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.