என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் – ஆ.நமச்சிவாயம்

--

புதுச்சேரி:

ன்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களிலுல், செய்தித் தாள்களிலும் என்னைப்பற்றி அரசியல் சம்பந்தமாக சில அவதூறான செய்திகளை யாரோ திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.