டில்லி,

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகள் தற்கொலைகள் குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் கடன் தொகைக்காக விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது என்று அதிரடி உத்தரவிட்டனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,  தமிழக அரசு விவசாயிகள் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்றும், விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு மெத்தன போக்கை கடைப்பிடிக்கக் கூடாது, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தவறியது ஏன் , விவசாயிகளின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று கடுமையாக சாடினர்.

அதைத்தொடர்ந்து,  விவசாயிகள் பிரச்சினைகளை களைய தமிழக அரசு  இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டருந்தது.

இந்நிலையில், வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விவசாயிகள்

கடனை திரும்ப செலுத்தவில்லை என்பதற்காக வங்கிகள் கடும் செயல்களில் ஈடுபடக்கூடாது,

இடைத்தரகர்கள் இன்றி விலைப்பொருட்களை கொள்முதல் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

கடன் வசூல் நடவடிக்கையின்போது வங்கிகள் விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது என்றும் உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.