சென்னை:

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை  என்று அமமுக துணைபொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். ஏற்கனவே வேலூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிடுவதை தவிர்த்த நிலையில், தற்போதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக  கட்சிகள் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பை காட்டி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற 18 சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, அமமுக பெரும் தோல்வி அடைந்த நிலையில் அதன்பிறகு நடைபெற்ற தேர்தலைகளை சந்திக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.