தமிழக அமைச்சரவை கூட்டம் (file photo)

சென்னை,

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. அப்போது, அமைச்சர்களிடம் மத்திய அரசு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

தமிழக பட்ஜெட் கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இந்த மாதத்தில் தொடங்க உள்ளது.

மேலும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம், டிடிவி தினகரன் கைது, அமைச்சர்கள் மீதான வழக்கு பதிவு, விவசாயிகள் பிரச்சினை  என பரபரப்பான  சூழ்நிலையில் தமிழக அமைச்சரவையின் 3வது கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

முதல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் காலை 11 மணி அளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தலைமை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரி கள்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்தும், மேலும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவது தொடர்பாகவும், விவசாயிகள் பிரச்சினை, நீட் நுழைவு தேர்வு, ரியல் எஸ்டேட் தடை குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என  சபாநாயகர் தனபால் தலைமை யில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழக அரசின் தற்போதைய சூழ்நிலையில், தமிழக அரசு குறித்து பாரதியஜனதாவினர் எவ்வளவு விமர்சித்தாலும்,  மத்திய அரசு குறித்து யாரும் ஏதும் பேசக்கூடாது என்று  அமைச்சர்களிடத்தில் முதல்வர் கெஞ்சியதாக கூறப்படுகிறது.

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் அதன் காரணமாக மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்றும் எடப்பாடி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.