ஆபாச காட்சியை கட் செய்ய வேண்டாம்: முன்னாள் சென்சார் அதிகாரியின் இந்நாள் பேச்சு!

டில்லி,

டந்த 2015ம் ஆண்டு மத்திய தணிக்கை வாரிய தலைவராக பாலஜ் நிகலனி நியமிக்கப்பட்டார். அவரது சர்ச்சை கருத்து காரணமாக ஒரு வருடத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே மத்திய தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த லீலா சாம்சன் பதவி விலகியதை அடுத்து அந்த பதவிக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பாலஜ் நிகலினி தற்போது நியமிக்கபட்டுள்ளார்.

இவர் தணிக்கை வாரிய அதிகாரியாக இருந்தபோது கடும் கட்டுப்பாடுகளை விதித்தவர், தற்போது இவரது ஜூலி2 திரைப்படத்தில் உள்ள ஆபாச காட்சிகளை கட் செய்யக்கூடாது என தணிக்கை வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தணிக்கை வாரியம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

நிகலனி  தணிக்கை வாரிய தலைவராக இருந்தபோது, திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தொப்புள் தெரியக்கூடாது, தொடை தெரியக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தார். இதன் காரணமாக கடும் சர்ச்சைக்கு உள்ளான நிகலனி,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெறாமல் பிரதமர் நரேந்திர மோடியை ஹீரோவாக சித்தரித்து எடுக்கப்பட்ட ‘மேரா தேஷ்  கா மகான்’ என்ற செய்தி படத்தை,  தியேட்டர்களில் ஒளிபரப்ப வைத்ததாக, மத்திய சினிமா தணிக்கை குழுவின் தலைவர் பெகலாஜ் நிகாலனி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் தணிக்கை வாரிய தலைவராக இருந்தபோது  ‘An Insignificant Man’ என்ற ஆவணப்படம் CBFC-யிடம் சென்சாருக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. ஆவணப்படத்தைப் பார்த்த நிஹலனி அந்த ஆவணப்படத்தை உருவாக்கிய இயக்குநர்கள் குஷ்பூ ரங்கா மற்றும் வினய் சுக்லா ஆகியோரிடம் மோடி மற்றும் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் நோ அப்ஜெக்‌ஷன் சர்டிஃபிகேட் (NOC) வாங்கி வாருங்கள் எனக் கூறியது பரபரப்பை உருவாக்கியது.

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே களமிறங்கியதன் தாக்கமாக ஆம் ஆத்மி கட்சி உருவாகியதும், அதன் தலைமையில் இருந்து அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக பொறுப்பேற்றதும் ‘An Insignificant Man’ என்ற ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு மோடியிடம் NOC கேட்பது எந்தவிதத்தில் நியாயம் என்று எதிர்ப்புக்குரல் உருவானது.

மேலும், 2016ம் ஆண்டு வெளியான ‘உட்தா’ பஞ்சாப் திரைப்படம் நிஹலனியின் பதவிக்காலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

பஞ்சாப் மாநிலத்தில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் போதைப் பொருள்களின் நிலையையும், அதனால் பாதிக்கப்படும் இளைஞர்களின் வாழ்வையும் படம்பிடித்த இத்திரைப்படத்தை 70 கட் கொடுத்து ரிலீஸ் செய்யச் சொன்னார் நிஹலனி.

பலகட்டப் போராட்டங்களுக்குப்பிறகு, மும்பை நீதிமன்றம் ஒரே ஒரு வெட்டுடன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதியளித்தது. ஆனால், படம் ரிலீஸாவதற்கு முன்பே சென்சாருக்குப் படக்குழு சமர்ப்பித்த படத்தின் காப்பி இணையதளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது.

அந்த சம்பவத்தைப்பற்றி இப்போது நிஹலனி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உள்துறை அமைச்சகத்திலிருந்து உட்தா பஞ்சாப் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய விட வேண்டாம் என்று எனக்கு கடிதம் வந்தது. பஞ்சாப்பில் போதைப் பொருள்களின் புழக்கத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாதது பற்றி வெளியே தெரியவந்தால் நன்றாக இருக்காது என்று கருதியவர்கள் எனக்கு அளவுக்கதிமகான நெருக்கடியைக் கொடுத்தார்கள் என்று Lehren TV-யில் பத்திரிகையாளர் பாரதி பிரதனுடன் பேசியபோது கூறினார்.  இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள பாலிவுட் படம் குறித்து தனது மாறுபட்ட கருத்துக்களை கூறி உள்ளார்.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நேஹா துபியா நடித்த முதல் ஜூலி படத்தின் முதல் பாகத்தில், நிர்வாண மற்றும் பாலியல் காட்சிகளின் இடம்பெற்றிருந்தது.

அதுகுறித்து, பேட்டி ஒன்றின்போது, நடிகைகளின் இதுபோன்ற கவர்ச்சி, தொடர்ச்சியாக ஆடைகளை களைவது போன்றவை நடிகர்களின் சமரசத்துக்கு மட்டுமே வழிவகுக்கும்என்று சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தற்போது பாலிவுட் படமான ஜூலி 2 வெளியாக உள்ளது. இதற்கான டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி இதுவரை காணாத அளவிற்குக் கவர்ச்சியாக நடித்துள்ளார். நடிகை ராய் லட்சுமி தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பிறகு அவரது மார்க்கெட் சரிந்துவிட்டது. அதற்குப் பிறகு கோலிவிட்டில் கண்டுகொள்ளப்படாத அவர், தெலுங்கு, கன்னட படங்களில் வலம் வந்தார்.

தற்போது ஜூலி2 திரைப்படம் தயாரிக்கப்பட்டு சென்சார் போர்டுக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில்  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள   நிஹலனி, இந்த படத்திற்கு  வயது வந்தவர்களாக சான்றிதழ் (ஏ) அளிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார். மேலும், இந்த படத்தில்  ஆபாசம் இல்லாததால் எந்த வெட்டுக்களும் தேவை இல்லை என்றும் பரிந்துரைக்கிறார்.

முன்னாள் தணிக்கை வாரிய தலைவர் ஒருவரின் இந்த சர்ச்சையான கருத்து பெரும் விவாதப்பொருளாகி உள்ளது.

இவர் சிபிஎப்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோதுஎன்னையா குற்றம் செய்தேன் என்று சொல்கிறார்கள்? என் பதவிக்கு நா ன் மிகவும் நேர்மையாக இருந்திருக்கிறேன். சென்சார் துறைக்காக என் பாக்கெட்டிலிருந்து 10 லட்ச ரூபாயை நான் செலவு செய்திருக்கிறேன். குடிப்பதற்கு மினரல் வாட்டர் பாட்டில்கூட வீட்டிலிருந்துதான் கொண்டுவருவேன். என் சொந்தக் காரை மட்டும்தான் என் பயணத்துக்குப் பயன்படுத்துவேன். அதற்குப் பெட்ரோலும் என் பணத்தில்தான் நிரப்புவேன் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.