வெட்கமா இல்லையா?: ஹினா மீது ஹன்சிகா பாய்ச்சல்

திரையில் மிக சாதுவான பெண்ணாக வரும் ஹன்சிகா, நிஜத்தில் அதிரடி பேர்வழி. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார். அப்படித்தான் இப்போது ஹன்சிகாவிடம் மாட்டிக்காண்டு விழிக்கிறார் நடிகை ஹினாகான். இவர், “தென்னிந்திய திரைதுறை, சேலை கட்டி நடிகைகளை கவர்ச்சியாக காட்ட மட்டுமே பயன்படுத்துகிறது” என்று சொல்லிவிட்டார். மேலும், “இது போல கவர்ச்சி வேடம் வந்த்தால், மகேஷ் பாபுவின் பட வாய்ப்பை நான் புறக்கணித்துவிட்டேன” என்றும் தெரிவித்திருந்தார். .அவ்வளவுதான்.. ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார் ஹன்சிகா. “இப்படிப் பேசினால் என்ன அர்த்தம்? தென்னிந்திய திரைத்துறையை எப்படி நீங்கள் மட்டமாக பேசலாம்?, பாலிவுட்டை சார்ந்த பலர் இங்கே நடித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே கவர்ச்சிப் பதுமையாகத்தான் வருகிறார்களா? இப்படிப் பேச வெட்கமாக இல்லையா” என்றெல்லாம் காய்ச்சி எடுத்துவிட்டார். இப்போது ஹினாகான் என்ன பதிலடி கொடுக்கப்போகிறார் என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றன, டோலிவுட்டும் மீடியாக்களும்!