சென்னை:

ள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் இன்றுமுதல் தொடங்க இருந்த நிலையில், வேட்புமனு பெற வேண்டாம் என்று  அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்  2 கட்டங்களாக நடைபெறும் என்றும் கடந்த டிசம்பர் 2ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி,  டிசம்பர் 27ந்தேதி மற்றும் டிசம்பர் 30ந்தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை  2020ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு தடை விதிக்கக்கோரி திமுக உள்பட சிலர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த நிலையில்,  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மறு உத்தரவு வரும் வரை வேட்பு மனுக்கள் பெறக் கூடாது என உத்தரவு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.