“போஸ்டர் அடிக்க வேண்டாம்” என ரஜினி மக்கள் மன்ற தலைமை உத்தரவு….!

தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன.

அரசியல் காட்சிகள் தங்களது பணியை தற்போதே ஆரம்பித்து விட்டனர் . யாருடன் யார் கூட்டணி என்று மக்கள் மன்றங்களும் வாதாட தொடங்கி விட்டனர் .

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை அரசியலில் முழுமையாக இறங்கக்கோரும் சுவரொட்டிகள் காணப்பட்டன.

“அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்”, “கட்சி வேறு, ஆட்சி வேறு” “இப்ப இல்லனா, எப்பவுமே இல்லை” என்று முழங்கிய பல சுவரொட்டிகளை பல இடங்களில் காண முடிந்தது .

இந்த நிலையில் தலைமை நிர்வாகி சுதாகர், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தொலைபேசி வாயிலாக தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்களை அடிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.