டெல்லி:
 வரி செலுத்துபவர்களை ஒருபோதும் துன்புறுத்தக்கூடாது என பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று மோடி தலைமையில், சிறப்பான நிர்வாகம் மற்றும் நேரம் சார்ந்த திட்ட அமலாக்கத்துக்கான மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் வரி செலுத்துவோர் குறைகள் தாமதமாக  தீர்க்கப்படுவதாக வந்த புகார்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய மோடி, கூட்டத்தில் பேசியதாவது:
tax-modi
வரி செலுத்துவோர் அனுப்பிய ஏராளமான குறைகள் தீர்வுகாணப்படாமலேயே உள்ளன.  இது மிகவும் கவலைக்குரியது.
வரி செலுத்துபவர்கள்  பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையை கட்டாயம் கையாள வேண்டும். நவீன தொழில் நுட்ப வசதிகளை  பயன்படுத்தி, எந்த அளவுக்கு விரைவாக தீர்வு காண முடியுமோ அந்த அளவுக்கு வேகம் காட்ட வேண்டும். எதையும் கிடப்பில் போடக்கூடாது.
ஒழுங்காக வரி  செலுத்துவோரின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதை விடுத்து, ஒரு போதும் அவர்களை துன்புறுத்தும் வகையில் வருமான வரித்துறையின் செயல்பாடுகள் இருக்க கூடாது.
இவ்வாறு மோடி பேசினார்.
இதையடுத்து, சுரங்க துறை மேம்பாட்டு திட்டத்தையும் ஆய்வு செய்தார். இதில் இந்த திட்டத்துக்கான நிதியை ஒரே சீரான அளவுகோலுடன் பயன்படுத்த வேண்டும்.  கனிம வள நிறைந்த 12 மாநிலங்களில் இருந்து ரூ.3,214 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதை விட அதிக மாக வசூலிக்கப்பட வேண்டும். கனிம வளம் மாநிலங்களில்  உள்ள பழங்குடியினர் உட்பட பின்தங்கிய பிரிவை சார்ந்தவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த நிதி செலவிடப்பட வேண்டும் என்றார்.
இதுபோல் பல்வேறு  மாநிலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.