கணவர் மாதவன் எங்கே என்று தெரியாது…!: ஜெ. தீபா ஓப்பன் டாக்

 

சென்னை:

னது கணவர் மாதவன் எங்கே இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது என்று ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, “எம்.ஜி.ஆர். அம்மா பேரவை” என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவரது கணவர் மாதவன், “எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழகம்” என்ற கட்சியை  நடத்தி வருகிறார்.

இருவரும் தீபாவுக்கு சொந்தமான சென்னை தி.நகர் இல்லத்தில் வசித்து வந்தனர். ஆனால் இடையிடையே இருவருக்கும் சண்டை ஏற்படுவதும், மாதவன் வீட்டைவிட்டு வெளியேறுவதும் நடந்துவந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயஸ் தோட்டத்துக்கு வெளியே மாதவனை கடுமையாக தீபா திட்டினார். இது ஊடகங்களிலும் வெளியானது.

இது போல் அடிக்கடி நடப்பது வழக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் ஜெ. தீபா. அப்போது இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இப்போது கூட எனது கணவர் வீட்டை விட்டு சென்று நான்கு நாட்கள் ஆகிறது. இதெல்லாம் சகஜம். எனது நண்பர்கள் அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். அங்கு அவர்கள் தங்கள் கணவரை வாரத்துக்கு ஒரு முறையோ 6 மாதத்துக்கு ஒரு முறையோதான் பார்ப்பார்கள். அதுபோல்தான் நானும் இருக்க விரும்புகிறேன். இப்போது கூட மாதவன் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.

எங்களுக்குள் சண்டை வந்து, நான் எங்கே போனாலும் அவர் கேட்க மாட்டார். அதுபோல் அவர் எங்கு போனாலும் நான் கேட்க மாட்டேன்.

நான், டிரைவர் ராஜாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சிலர் சொல்வது பொய். நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க விரும்பமாட்டேன். நான் சுதந்திரமாக இருக்க விரும்புபவள். நான் என்ன செய்வது என்ற முடிவை நான் மட்டும்தான் எடுக்க வேண்டும்” என்று ஜெ.தீபா தெரிவித்தார்.