தினகரனை விட்டு வைக்கவே கூடாது : இ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை,

மிழகத்தை உலுக்கி வரும் சசிகலா குடும்பத்தினர் மீதான  அதிரடி ரெய்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ள பணம், நகைகள் மற்றும் மதிப்பிட முடியாத அளவுக்கு உள்ள வைரங்கள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, இதற்கு காரணமாக சசிகலா மற்றும் டிடிவி தினகரனை விட்டு வைக்கவே கூடாது என்று அதிரடியாக கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், கடந்த ஆண்டு  பண மதிப்பிழப்பு செய்தபோது, 50க்கும் 100க்கும் மக்கள் அல்லாடி கொண்டிருந்தபோது, சுமார் 1280 கோடி அளவிலான பழைய பணத்த புதிய நோட்டுக்களாக மாற்றியுள்ள தகவல்களும் வெளியாகி உள்ளது.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என்ற பெயரில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் முறைகேடாக  சம்பாதித்துள்ள கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணம் பற்றிய தகவல்கள் வெளியா உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து, தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியதாவது,

கடந்த 20 ஆண்டு காலமாகவே சசிகலா குடும்பத்தினர் தமிழ்நாட்டை சுரண்டி கொண்டு இருந்தனர் என்று அதிரடியாக கூறினார்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த டிடிவி தினகரனை விட்டு வைக்கவே கூடாது என்றும், அவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இவை அனைத்துக்கும் காரணமான சசிகலாவை  தனிமைப்படுத்தி சிறையில் சென்று விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், வருமானவரித்துறையின் ஒட்டு மொத்த சோதனைக்கும் சசிகலாதான் முதல் குற்றவாளி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.