நம்பிக்கை இழந்து விடாதீர்கள் ; எல்லாம் சரியாகும் : ஆண்ட்ரியா

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த கொரோனா ஊரடங்கிலும் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள்.

இதனிடையே காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஆண்ட்ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அதில் “நாட்டுக்காகவும், எங்கள் அனைவருக்காகவும் கடினமாக உழைக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வைரஸை எதிர்த்து கடுமையாக போராடு வருகிறீர்கள். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். எல்லாம் சரியாகும். அனைத்தும் மீண்டும் நல்லபடியாக மாறும் என்று நம்புகிறோம். நன்றி” என தெரிவித்துள்ளார்.