எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது: பத்திரிகைகளுக்கு அதிமுக எம்.பி. அட்வைஸ்

சென்னை:

ழுத்து சுதந்திரத்தை பத்திரிகைகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று பத்திரிகைகளுக்கு அதிமுக எம்.பி. தம்பித்துரை அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக அவரது  நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் மீது கோபால் மீது ஆளுநரின் செயலாளர்  கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது  செய்யப்பட்டார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து  தனது சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் உள்ள ஊடகத்துறையினரிடையேபெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்து. அரசியல் கட்சிகளும் அதிமுகவின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி. தம்பித்துரை,  எழுத்து சுதந்திரத்தை தவறாக பத்திரிகைகள்  பயன்படுத்தக் கூடாது என்றும், பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்வதாகவும் கூறினார்.

மேலும், திமுகவினர் பாஜகவுடன் மறைமுக தொடர்பில் இருப்பதாகவும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள திமுக மறுத்து வருகிறது..  அதன் காரணமாக  பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக முயற்சி செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.