டெல்லி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க கைகளில் உபயோகப்படுத்தப்படும் சானிடைசரை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதை தடுக்க பொதுமக்களில் அடிக்கடி கைகழுவ வேண்டும் என்றும்,  கைசுத்திகரிப்பான் (சானிடைசர்) பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
ஆனால், சானிடைசர் அடிக்கடி உபயோகப்படுத்துவதால், கைகளில் அலர்ஜி ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. இதையடுத்து, கை சுத்திகரிப்பானை (சானிடைசர்)  அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம்  அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சானிடைசரின் அதிகப்படியான பயன்பாடு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்திருப்பதுடன், கடந்த ஆறு மாதங்களில் நம் வாழ்வில் சானிட்டைசரின் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளன.
உங்களைப் பாதுகாக்க முகமூடிகளைப் பயன்படுத்துங்கள். சுடு நீர் மற்றும் கைகளை சுத்தம் செய்யுங்கள். இருப்பினும்,  சானிடைசரை தேவையின்றி அதிகம் பயன்படுத்த வேண்டாம் எச்சரித்து உள்ளனர்.
மேலும், சானிடைசரின்   அதிகப்படியான பயன்பாடு சருமத்தை சுத்தமாக வைத்திருக்கும் பாக்டீரியாக்களின் அழிவுக்கு காரணமாவதாகவும்,  சானிடைசருக்கு பதிலாக சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.