கொழும்பு:

லங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசா, வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிடம், எனக்கு வாக்களித்த மக்களை  துன்புறுத்தப்படக்கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

இலங்கை அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றதைத் தொடர்ந்து நாட்டின் 7வது அதிபராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.  அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், தனக்கு  தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்கவில்ல என்று பகிரங்கமாக கூறினார். இருந்தாலும், தான் நாட்டில் வாழும் அனைவருக்குமான சலுகைகள், சமாதானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வேன் என்று கூறினார்.

தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை என்று கோத்தபய கூறியது, இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழ் மக்களின் ஆதரவுடன் போட்டியிட்ட சதித் பிரேமதாசா, கோத்தபயவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுன்,  தோ்தலில் என்னை ஆதாித்தமைக்காக நாட்டிலுள்ள எந்தவொரு குடிமக்களும் துன்புறுத்தப்பட கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.