இஸ்லாமாபாத்,

குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையில், காங்கிரசும், பாஜகவும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, மணி சங்கர் அய்யர் குறித்தும், பாகிஸ்தான் ராணுவ முன்னாள் தலைவர் குஜராத் தேர்தலில் தலையிடுவதாகவும், இதற்கு காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும் என பேசியிருந்தார்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்தார்.

இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரசுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பாக். வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் நடந்து வரும் குஜராத் சட்டசபை தேர்தலில் பாக்.கை தொடர்புபடுத்துவது அடிப்படை ஆதாரமற்றது. இந்திய அரசியல் தலைவர்கள் தங்களது சுயலாபத்திற்காக பாகிஸ்தானை இழுப்பது சரியல்ல. இதனை இந்தியா நிறுத்திக்கொண்டு தங்கள் கட்சியின் பலத்தை கொண்டு நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.