பா.ரஞ்சித்

சென்னை,

டிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை விமர்சித்து பேசியுள்ளார்.

இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால், இந்த கருத்து பாரதியஜனதா கட்சியினருக்கு  கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மெர்சல் படத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தும், மறைமுகமாக மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

மெர்சல் படத்தில்ஜிஎஸ்டி தொடர்பான  சர்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கூடாது என்று ஒரு தரப்பினரும், நீக்க வேண்டும் என்று பாஜக ஆதரவு தரப்பினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை வந்த கபாலி பட இயக்குனரான பா.ரஞ்சித், மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்து மக்களின் எண்ணம்தான் என்றும், அவற்றை நீக்க வேண்டிய அவசியமில்லை என்றும்  கூறி உள்ளார்.