ஓவியாவை காப்பாற்ற வேண்டாம்.. விவசாயிகளை காப்பாற்றுங்கள்!: வித்தியாசமான ஓட்டல் பில்

சென்னை,

டலூரில் உள்ள கொக்கரக்கோ என்ற உணவு விடுதியில் வித்தியாசமான முறையில் உணவுக்கான பில் வழங்கப்பட்டு வருகிறது. அதில், ஓவியாவை காப்பாற்றியது போதும்,  விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சினைகள்  எவ்வளவோ இருக்கும் நிலையில், பெரும்பாலோனோர் தனியார் டிவி நிகழ்ச்சியான பிக்பாசை பற்றியே பேசி வருகின்றனர். வலைதளம் முதல் டீக்கடை வரை தற்போது ஓவியாதான் ஹீரோ.

விளம்பர நோக்கத்திற்காகவும், வருமானத்திற்காகவும் நடத்தப்படும் ஒரு ஷோவுக்கு ஆதரவாக பல ஹோட்டல்கள் தங்களது  பில்லில் கூட ‘சேவ் ஓவியா ‘ என்று அச்சடிக்கப்பட்டு, வாடிக்கை யாளர்களுக்கு வழங்கி தங்களது பாசத்தை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ‘கொக்கரக்கோ’  ஓட்டல் நிர்வாகம், விவசாயிகள், பொதுமக்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போராடி வரும் நிலையில், ஓவியாவை காப்பாற்ற வேண்டும் என்று  ஓவியாவுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளது.

இதையடுத்து தனது உணவக பில்லில், , ‘stop saving oviya  big boss’ , என்று அச்சிட்டும், அதன் கீழே,  ‘விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்’  ‘கடலூர், கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளைக் காப்பாற்றுங்கள் ‘ என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

கொக்கரக்கோ ஓட்டல் முதலாளியின் இந்த அதிரடி செயல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.