பொலோனா,

த்தாலி சென்றுள்ள போப் பிரான்சிஸ் அங்கு போலோங்னா நகரில் உள்ள அகதிகள் முகாமை பார்வையிட்டார்.

கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்சிஸ் இந்தாலி சென்றார். அப்போது  அகதிகளுடன் ரொட்டி சாப்பிட்டு, அவர்களைப்போன்ற அகதிகளுக்கான அட்டையாள அட்டையை அணிந்து அவர்களு டன் உரையாடினார்.

அதைதொடர்ந்து, அகதிகளை எதிரிகளாக பார்க்காதீர்கள் என்று உலக நாடுகளுக்கு போப் வேண்டு கோள் விடுத்தார்.

இத்தாலி போலோங்கனா அகதிகள் முகாமுக்கு சென்ற போர், அங்கு சுமார் 1 மணி நேரம் அகதிகளுடனான சந்தித்து பேசினார்., ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அகதிகள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்., பின்னர் பசிலிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளோருக்கு தேவையான பொருட்களும், மதிய உணவும் வழங்கினார்.

அப்போது, அகதிகளுக்கு இத்தாலி அரசு வழங்கி வருவது போன்ற அட்டையாள அட்டையை அணிந்து அவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும் மவுனமாக பிரார்த்தனை செய்தார்.

“உங்கள் நம்பிக்கை , நம்பிக்கையற்றதாக ஆகிவிடாது என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

செசனாவில் உள்ள “பியாஸ்ஸா” சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்களுடன் உரையாடினார், அப்போது,  நகரம், அனைத்து தரப்பு  மக்களும் ஒன்றாக வந்து வாழ்ந்து சமூகத்தின் உணர்வை பகிர்ந்து கொள்ளும் இடம் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து இ த்தாலி குடியேற்ற மையத்திற்கு விஜயம் செய்தார். அவரை அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

அபப்போது, போப் அகதிகளுக்கு வழங்க வேண்டிய  முக்கிய முன்னுரிமைகள் சிலவற்றை வலியுறுத்தினார்.

மேலும், புலம்பெயர்ந்து வருபவர்களை  வரவேற்று, அவர்களுக்கு கவுரவமான வேலை கொடுத்து, நெறிமுறை அடிப்படையிலான அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர்களுக்கான உணவு, வரவேற்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அகதிகளை எதிரிகளாக அரசுகள் அணுகக்கூடாது, சொந்த நாட்டை இழந்து, மற்ற நாடுகளில் தஞ்சமடைய வருபவர்களை  எதிரிகளாக பார்க்கக்கூடாது என்றும்,  அவர்களின்  மனதில் மற்றும் இதயங்களை அடைய வார்த்தைகள் தேவை, கத்தி தேவை இல்லை,” என்றும், என்பதை உணர்த்துவதற்காக அகதிகள் அடையாள பட்டை அணிந்ததாகவும் போப் பிரான்சிஸ் கூறினார்.

போப்பின் வருகை அகதிகளிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலி வந்துள்ள போப்பை அரசு அதிகாரிகள் மற்றும் இத்தாலி மாகாண மேயர் மற்றும் கவுன்சிலர்கள் சந்தித்து பேசினர்.