Random image

தட்டவும் இல்லை, திறக்கவும் இல்லை: தம்பிதுரை

கரூர்:

கூட்டணி அமைக்க வேண்டி பாரதியஜனதாவின் கதவை  அதிமுக கதவை தட்டவும் இல்லை, திறக்கவும் இல்லை என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான  தம்பிதுரை கூறினார்.

தமிழகத்தில் பாரதியஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக அதிமுக எம்.பி. தம்பித்துரை  மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த  தம்பித்துரை,   “பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக கதவை தட்டவும் இல்லை, திறக்கவும் இல்லை. அதிமுக தனித்து நின்று வெல்லும் வலிமையுடன் உள்ளது என்றும்,  பாஜகவுடன் உறவு வைத்து கொள்ள திமுக நாடகமாடுகிறது.” என்று கூறினார்.

மேலும்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது மத்திய அரசின் கடமை. மாநில அரசுகள் வெறும் இரண்டு ரூபாய் குறைப்பதால் பயனில்லை.” என்று கூறியவர்,  “புதிய செஸ் வரி மூலம் மத்திய அரசுக்கே பயன் கிடைக்கிறது எனவே இதில் மத்தியஅரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.