தீவிரவாதம் வேண்டாம்: பாகிஸ்தானுக்கு இந்தியா-ஆப்கானிஸ்தான் வலியுறுத்தல்!

டில்லி:

ரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபல் அஷ்ரப் கனியும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும் என கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் ஆப்கானிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரும், இந்திய உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

பேச்சு வார்த்தையில்,  இருநாடுகளுக்கு இடையே உள்ள  உறவை பலப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது உள்ளிட்ட  பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அத்துடன்  3 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும்  கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.  இந்திய பிரதமர் மோடி கூறும்போது, “கல்வி, சுகாதாரம், வேளாண்மை, திறன் மேம்பாடு, பெண்கள் அதிகாரம் பெறச்செய்தல், எரிசக்தி, உள் கட்டமைப்பு வசதிகள், ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்துவது ஆகிய பணிகளுக்காக ஆப்கானிஸ் தானுக்கு ரூ.6,700 கோடி கடன் வழங்கப்படும்” என்றார்.

இரு நாடுகள் சார்பில் வெளி யிடப்பட்ட கூட்டறிக்கையில், “இந்தியாவில்  அரசியல் நோக்கங்களுக்காக பாகிஸ்தான் தீவிர வாதத்தை பயன்படுத்தி வருவது குறித்து  தங்களது கவலையை வெளிப் படுத்தினர். நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது, அவற்றுக்கு புகலிடம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிபராக பதவியேற பிறகு இரண்டாவது முறை பயணமாக அதிபர் அஷ்ரப் கனி இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி