பாட்டில் தண்ணீர் பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு

--

 

download

புதுடில்லி: ‘பாட்டில் தண்ணீரை பயன்படுத்துவதால், 30 சதவீதம் வரை தண்ணீர் வீணாகிறது. ஆகவே  அதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” என்று  மத்திய அரசு துறைகளுக்கு கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு கடுமையான கோடை காரணமாக, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட  பல மாநிலங்களில், கடும் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால்  குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடிநீரை சேமிப்பது பற்றியும், வீணாக்காமல் பயன்படுத்துவது பற்றியும், மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மத்திய அரசின்  துறை சார்ந்த கூட்டங்கள், அமைச்சக அதிகாரிகள் கூட்டங்களில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், நடந்த  நாடாளுமனற  அமைச்சக கூட்டத்தில், பங்கேற்றவர்களுக்கு, சிற்றுண்டி, தேநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால், குடிநீர் பாட்டில்கள்   வழங்கப்படவில்லை. தேவைப்படுபவர்கள்,  டம்ளரில  வாங்கி குடித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற  விவகாரத் துறையின் சார்பில், மற்ற அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும்  ஒரு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது;

அதில் ,” பாட்டில்கள் மூலம் விற்கப்படும், குடிநீரில், 30 சதவீதம் வரை தண்ணீர், வீணாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேவைக்கு, அதிகமான தண்ணீரை, குடிக்காமல், பாட்டிலிலேயே விட்டுச் செல்வதால் இந்த இழப்பு நேர்கிறது.  ஆகவே பாட்டில் மூலம் தண்ணீர் வழங்குவதை, கைவிட வேண்டும்; அதற்கு மாற்றாக, டம்ளர்களில் தண்ணீர் வழங்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.