டோக்கியோ:

ரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்று ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர், ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை மற்றும் பிரதமரை  சந்தித்தபின்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொலால்ட டிரம்ப் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக டோக்கியோ சென்றுள்ளார். அங்கு ஜப்பான் மன்னர் நாருஹிட்டோசந்தித்ததார். அதைத்தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் மற்றும் வடகொரியா, ஈரான் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்த இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் கூறியதாவது,  ’அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் அரசு விரும்பினால் நாங்களும் தயார்.  ஈரான் நாட்டு தலைமையிடம் ஷின்சோ அபே மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பது எனக்கு தெரியும்.  ஈரானுக்கு மோசமான நிலைமை ஏற்பட யாரும் விரும்பவில்லை. குறிப்பாக, நான் ஈரானை காயப்படுத்த விரும்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்கா ஈரான் மோதலுக்கு காரணம் என்ன?

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது. அதுமுதல் இரு நாடுகளுக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்ந்து வருகிறது. இதன் காரண மாக ஈரானை வழிக்கு கொண்டுவர அமெரிக்கா ஈரான்மீது  பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில் ஈரானை பயமுறுத்தும் வகையில்,  அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும்   போர் தளவாடங்களை குவித்து இருக்கிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், டிரம்ப் 4 நாள் பயணமாக  ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளளார். ஜப்பான் ஈரானின் நெருங்கிய நட்புநாடு., இந்த நிலையில், டிரம்ப் ஜப்பானி விஜயம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே உடனான சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களின் சந்திப்பின்போது,  ஈரான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து பேசிய டிரம்ப், “நாங்கள், ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அந்நாட்டில் அணுஆயுதங்கள் இல்லாது இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்பதை தெளிவுபடுத்த கடைமைப்பட்டுள்ளேன். இருதரப்பு இடையே ஒருமித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதே சிறந்தது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால், நாங்களும் தயாராக இருக்கிறோம்” என கூறினார்.