அமிதாப்பச்சன் நடித்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிங்க்’ இந்திப்படம் “நேர் கொண்ட பார்வை” என்ற பெயரில் தமிழில் ரீ மேக் செய்யப்பட்டது.

அஜீத் நடிப்பில் 2019-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த இந்தப்படம் வசூலை குவித்ததோடு, அஜூத்துக்கு பெயரையும் வாங்கி கொடுத்தது.

அமிதாப்பச்சனும், அஜீத்தும் ஏற்கனவே அணிந்த கறுப்புச்சட்டையை இப்போது பவன் கல்யாண் அணிந்துள்ளார்.

‘பிங்க்’ தெலுங்கு மொழியில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.

வக்கீலாக பவன் கல்யாண் நடித்துள்ளார்.

அரசியலில் முழு மூச்சாக இருந்த பவன் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள வக்கீல் சாப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் வேணு இயக்கியுள்ள இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து விட்டது.

பவன் கல்யாணுக்காக, இந்த படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கறுப்புச்சட்டை, பவனுக்கு பொருந்துமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

– பா. பாரதி