திரையங்குகளில் எழுந்து நிற்பதன் மூலம்தான் தேசப் பற்றை வெளிப்படுத்த வேண்டுமா என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

national anthem

திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும். தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் திரைையரங்குகளில் சிலர் எழுந்து நிற்காமல் இருந்தனர்.  அவர்களில் சிலர் சில இடங்களில் தாக்கப்பட்டனர். உடல் நலம் முடியாதவர்கள், கால் ஊனமுற்றவர்களும் இப்படி தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பான உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மற்றும் நீதிபதி சந்திர சூட் ஆகியோர் அடங்கி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘ஒருவர் எப்போதும் தனது தோளிலேயே தேசப்பற்றை சுமந்துகொண்டிருக்க என்கிற அவசியம் கிடையாது” என்று தெரிவித்ததோடு, “திரையரங்குகளில் எழுந்து நிற்பதன் மூலம் தேசப்பற்றை வெளிப்படுத்த  வேண்டுமா” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 9ம் தேதிக்குள்  புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன்மூலம் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது, எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றப்படலாம் என்று  கூறப்படுகிறது.