குண்டாஸ் சட்டத்துக்கு இலக்கு என்ன? ஒரு கொலை வழக்கு இருந்தாலே குண்டர் சட்டம் பாயுமா?  காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

--

மதுரை:

குண்டர் சட்டத்தில் கைது செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா, ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் மீதும் குண்டர் சட்டம் பாயுமா?   என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியது.

நித்தகராறில் முதியவர் ஒருவர் உயிரிழந்தது காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர்  மீது காவல்துறையினர் குண்டாஸ் சட்டத்தை உபயோகப்படுத்தி இருந்தனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.

தேனி மாவட்டத்தல், நில ஆக்கிரமிப்பு தகராறின்போது, இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது,  கலாதேவி என்பவர் தள்ளிவிட்டதில் 70 வயது மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

இதன் காரணமாக கலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கலாதேவி ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணையின்போது, கலாதேவி மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலாவதி வழக்கறிஞர்,  ஒரு சாதாரண பெண் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து நீதிபதி, காவல்துறை நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்து, கலாதேவிக்கு ஜாமீன் வழங்கினார்.

அத்துடன், குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்தது குறித்து விளக்கமளிக்க தேனி மாவட்ட எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தோடு, விசாரணைக்கு ஆஜரான காவல்துறை உதவி ஆய்வாளரிடம்,

குண்டாஸ் சட்டத்துக்கு இலக்கு என்ன?

தமிழக காவல்துறையில் ஓர் ஆண்டில் இத்தனை குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதா?

கொலை வழக்கு பதிவு செய்தாலே குண்டர் சட்டம் போட முடியுமா ?

ஒரு கொலை வழக்கு இருந்தாலும் அவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயுமா?

என்று நீதிபதி சுவாமிநாதன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து,  கலாதேவி மீதான குண்டர் சட்டம் திரும்ப பெறுவதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டது. அதையடுத்து வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

You may have missed