கமல் அரசியலுக்கு அதாவது நேரடி அரசியலுக்கு வருவாரா என்பதுதான் டி.ஆர்.பி. கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் “கமல் அரசியலுக்கு வரும் வாய்ப்பே அதிகம்” என்று 35 வருடங்களுக்கு முன்பே ஒருவர் கணித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? பத்திரிகையாளர் எழுத்தாளர் ஞாநி தான் அவர்.

இது குறித்து அவர் எழுதியிருக்கும் முகநூல் பதிவு: “கமல் அரசியலுக்கு வரக் கூடும் என்பது 35 வருடங்கள் முன்னர் தீம்தரிகிட இதழுக்கு நான் அவரிடம் பேட்டி எடுத்தபோதே தோன்றியது.

( அந்த பேட்டி அன்னம் வெளியிட்டுள்ள என் கேள்விகள் தொகுப்பில் உள்ளது.) கமலுடன்பேசிய ஒரு மேடையில் நான் கமல் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று இப்போது சொன்னாலும் பின்னால் வரும் வாய்ப்பு உள்ளது என்று 30 வருடங்கள் முன்னரே சொல்லியிருக்கிறேன்.

அண்மையில் 6 மாதங்கள் முன்னர் கூட ரஜினியை விட கமல் அரசியலுக்கு வரும் வாய்ப்பே அதிகம் என்று புதிய தலைமுறை டிவி விவாதத்தில் சொன்னேன். இப்போதும் அவர் வராமல் போகலாம். எனினும் வரும் வாய்ப்பும் தேவையும் இருப்பதாகவே இன்னமும் தோன்றுகிறது!”