அச்சு அசல் ட்ரம்ப் போலவே இருக்கும் இன்னொரு பிரபலத்தை உங்களுக்குத் தெரியுமா?

லகில் ஒரே மாதிரி தோற்றத்தல் ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த வகையில், பிரபலங்களைப் போல இருக்கும் பிறரும் புகழ் பெற்றுவிடுவார்கள்.

நம் ஊரில், நடிகர்களைப் போல இருப்பவர்கள் மேடை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழ் பெறுகிறார்கள். அதே போல அரசியல் தலைவர்களைப்போல தோற்றம் கொண்டவர்கள் தேர்தல் நேரத்தில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்து தொண்டர்களை மகிழ்விப்பதை பார்த்திருக்கிறோம்.

அமெரிக்காவில் சமீபத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப் போலவே  அச்சு அசலாக இருக்கிறார் ஒருவர். ‘சாட்டர்டே நைட் லைவ்’  என்னும் தொதலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அலெக் பால்ட் என்பவர்தான் அவர்.

இருவரும் எந்த அளவுக்கு ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்றால்.. பிரபல நாளிதழ் ஒன்று டிரம்ப் படத்துக்குப் பதிலாக  அலெக் பால்ட்டின் படத்தை பிரசுரித்துவிட்டது.

ஆம்… டொமினிகன் நாட்டில் பிரபலமான நாளிதழ், சமீபத்தில் “ ட்ரம்ப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு செயல்படுகிறார்” என்று ஒரு செய்தி வெளியிட்டது. இதில் பெஞ்சமின் படத்தை சரியாக வெளியிட்ட  அந்த நாளிதழ், டிரம்ப் படத்துக்குப் பதிலாக அலெக் பால்ட்டின் படத்தை பிரசுரித்துவிட்டது!

மறுநாள், “டிரம்ப் போலவே  போலவே அலெக் பால்ட் இருந்ததால் தவறுதலாக படம் பிரசுரிக்கப்பட்டது” என்று அந்த நாளிதழ் வருத்தம் தெரிவித்தது.