வருகிறது “அறம்” இரண்டாம் பாகம்…  ஹீரோயின் யார் தெரியுமா?

 

கோபி நயினார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான ‘அறம்’ திரைப்படம் மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது. உள்ளூர் அரசியல் முதல்  உலக அரசியல்வைரை பேசும் இந்தத் திரைப்படம் மக்களுக்கு ஒரு படமாக இல்லாமல் பாடமாக வந்திருக்கிறது என்ற விமர்சனம் அனைவராலும் வைக்கப்படுகிறது.

குத்துப் பாட்டு, அதிரடி சண்டைக் காட்சி, பஞ்ச் டயலாக் ஏதும் இல்லை. ஆனால் வசனங்கள் ஒவ்வொன்றும் ஈட்டியாய் மனதில் தைக்கிறது.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் வருமா என்ற கேள்வி, படம் பார்த்த அனைவரிடமும் எழுந்துள்ளது.

இது குறித்து அறம் இயக்குநர் கோபி நயினார், “விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

அடுத்ததாக,, “இரண்டாம் பாகத்தின் ஹீரோயினும் நயன்தாரா தானா.. வேறு யாருமா” என்ற கேள்வி எழுந்தது. அதற்கும் சஸ்பென்ஸ் ஆன புன்னகையையே கோபி நயினார் அளத்தார்.

இந்த நிலையில், “அறம்” இரண்டாம் பாகத்திலும் நயன்தராதான் ஹீரோயின் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறம் படம் வெற்றி என்பதோடு, நல்ல பெயரையும் வாங்கித் தந்திருப்பதில் ஹீரோயின் நயன்தாரா மகிழந்திருக்கிறார். நேற்று முன்தினம் இயக்குநர் கோபி நயினாரை தொடர்புகொண்ட நயன்தாரா, “எனது மற்ற படங்களில் கால்ஷீட்டுகளை பிரச்சினை வராமல் அட்ஜெஸ்ட் செய்து தேதிகள் தருகிறேன். அடுத்த பாகம் ஆரம்பித்துவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.

ஆக… அறம் இரண்டாம் பாகத்திலம் நயன்தான் ஹீரோயின். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.