ரியல் “சர்கார்” ஹீரோ இவர்தான், தெரியுமா?

”சர்கார்” பட கதைத் திருட்டு விவகாரத்தில் ஆன்ட்டி கிளைமாக்ஸாக படத்தின் கதையை வெளிப்படையாக சொல்லிவிட்டார் எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்.

“ஓட்டுப்போட வரும் விஜய், தனக்கு முன்பே தனது ஓட்டு போடப்பட்டுவிட்டதை அறிந்து ஆவேசப்படுகிறார். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கினேன்” என்று  சர்கார் பட இயக்குநர் முருகதாஸ் கூறியதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது முழுக்கதையையும் பாக்யராஜ் சொல்லிவிட்டார்.  அதாவது, தனது ஓட்டு ஏற்கெனவே போடப்பட்டதால் ஆத்திரமான விஜய், அடுத்து வரும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெல்கிறார். அத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைகிறது. ஆகவே கட்சியினர், சுயேட்சையான விஜய்யின் ஆதரவைக் கேட்கிறார்கள். அதோடு அவரையே முதலவர் ஆக்குவதாகவும் சொல்கிறார்கள்.  ஆனால் அதை மறுத்து விஜய் வெளிநாட்டுக்குப் பறக்கிறார்.

இதுதான் முக்கியமான காட்சி. இதற்கு ஏ.ஆர். முருகதாஸுக்கு இன்ஸ்ப்ரேசனாக இருப்பவர்… மதுகோடா.

யார் இந்த மதுகோடா?

சுயேட்சையாக வெற்றி பெற்று ஜார்கண்ட் மாநில முதல்வரான  ஜனநாயக அதிசயம் இவர்.

மலைவாழ் விவசாயி ஒருவரின் மகனாக 1971-ம் ஆண்டு பிறந்தவர் மதுகோடா. படிக்கும் காலத்திலேயே மாணவர் தலைவராக வலம் வந்தவர்.   2006-ம் வருடம்  சுயேட்சையாக வெற்றி பெற்றார். அப்போது மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை… திறமையாக செயல்பட்டு முதல்வராக பதவியேற்றார்.

நாட்டில் சுயேட்சையாக வெற்றி பெற்று முதல்வரான முதல் நபர் இவர்தான். அப்போது இவரை ஜனநாயக அதிசயமாக அனைவரும் பார்த்தார்கள்.

ஆனால் அதன் பிறகு இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. வழக்குகள் நடந்தன. சிறைக்குச் சென்றார். அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.

பலரும் நினைப்பது போல சர்கார் கதையின் ஒன்லைன்.. கதைக்கு இன்ஸ்ப்ரேசன்… நடிகர் சிவாஜி கணேசன் அல்ல.. மதுகோடாதான்.

 

Leave a Reply

Your email address will not be published.