சென்னை

கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.   தமிழகத்தில் இதுவரை 2767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1341 பேர் குணம் அடைந்துள்ளன்ர்.  அத்துடன் 29 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்புக்காக தற்போது சுமார் 1400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களுக்குச் சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பது குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக்குழுவை சேர்ந்த மருத்துவர் ரவி, “கொரோனாவால் பாதிக்கப்படுவோர் அனைவரும் பல வயதுஅலில் உள்ளனர். மேலும் ஒவ்வொருவர் உடல்நிலையும் மாறுபடுகிறது.  எனவே ஒரு விதமான சிகிச்சையை அனைவருக்கும் மேற்கொள்ள முடிவதில்லை.  எனவே பல முறைகளை மேற்கொண்டு வருகிறோம்.  இதில் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அறிகுறி இல்லாதவர்கள் என்னும் அடிப்படையில் நோயாளிகளைப் பிரிக்கிறோம்.

அறிகுறி இல்லாதவர்களுக்கு அதிகம் சிகிச்சை தேவைப்படாது .  ஆனால் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.  தினசரி ஒரு முறை அவர்களுடைய  இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சோதிக்கப்படுகிறது.  ஆனால் அறிகுறி உள்ளவர்களுக்குச் சிகிச்சை அவசியம் ஆகும்.  மேலும் அவர்களைத் தீவிர கண்காணிப்பில் வைக்க வேண்டியது மிக அவசியம் ஆகும்.

சிகிச்சை பெறுவோருக்கு இரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே ஆகியவை நடத்தப்படுகின்றன  அத்துடன் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கவனிக்கப்படுகிறது.   சிறுநீரக கோளாறு மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.   இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அவசியமாகும், எனவே இவர்களுக்கு அதிகம் புரொட்டின் உள்ள உணவுகள் அளிக்கப்படுகின்றன.  இவர்களுக்கு மூன்று விதமான உணவுகள் அளிக்கப்படுகின்றன”எனத் தெரிவித்துள்ளார்.

இதே மருத்துவக் குழுவில் உள்ள உணவு நிபுணர் கார்த்திகா, “கொரோனா நோயாளிகளுக்கு பழங்கள், பருப்புகள் உள்ளிட்ட உண்வுகள் அளிக்கப்படுகின்றன.  குழந்தைகளுக்குப் பால் மற்றும் தயிர் வழங்கப்படுகிறது.   முக்கிய உணவாக, இட்லி, பொங்கல், சப்பாத்தி ஆகியவை அளிக்கப்படுகின்றன.    நோய் காரணமாகச் சிலருக்கு ருசி மரத்துப் போய் விடுவதால் அவர்களுக்கு ருசி மிகுந்த பழச்சாறுகள் அளிக்கிறோம்.   நோய் எதிர்ப்புச் சக்திக்காகப் பழச் சாறுகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது

உண்வைத் தவிர நோயாளிகளின் மனநிலை அமைதி மிகவும் முக்கியமானதாகும்.  மன தைரியம் இருந்தால் மட்டுமே கொரோனாவை எதிர்த்துப் போரிட முடியும் என்பதால் நோயாளிகளுக்கு மன் திடத்தை அதிகரிக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.   மேலும் இவர்களை கவலையின்றி உணரச் செய்ய இசை, புத்தகங்கள், தொலைப்பேசிகள் செய்தித் தாள்கள் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.