பேஸ்புக்கில் எத்தனை கோடி ஃபேக் ஐடிக்கள் இருக்கின்ற என்பது குறித்த தகவலை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று இளையதலைமுறையினர் மட்டுமின்றி முதியவர்கள் வரை பேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள். பொது மக்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் சமூக வலைதளங்களில் பேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் (ஃபேக் ஐடிக்கள்) குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை சுமார் 210 கோடி பேர். இதில்  13 சதவிகித கணக்குகள் ஃபேக் ஐடிக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. அதாவது  சுமார் 27 கோடி ஃபேக் ஐடிக்கள் உள்ளன.

இந்த போலி கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.