ந்திய நாட்டின் முதல் குடிமகனாக இருப்பவர் ஜனாதிபதி. இவரது பதவியும் 5 ஆண்டு காலம்தான். ஆனால், இவரை தேர்வு செய்யும் முறை சற்றே வித்தியாசமானது.

பொதுவாக பிரதமரையோ, முதல்வரையோ, தேர்ந்தெடுப்பது அந்தந்த கட்சி சார்பாக  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்.

ஆனால் குடியரசு தலைவர் தேர்வானது முற்றிலும் மாறுபட்டது. எவ்வாறு நமது குடியரசு தலைவர் தேர்வு செய்யப்படுகிறார் என்பதை பார்க்கலாம்…

13வது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி நாட்டின் 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது நாட்டை ஆண்டுவரும் பாரதியஜனதா சார்பில் வரும் 15ந்தேதி வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு  வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த வேட்பாளரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்த இருக்கிறது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் வேட்பாளர் குடியரசு தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவார்.

இந்த மறைமுக் தேர்வில் யாரெல்லாம் பங்குபெற முடியும்?

 

மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் 
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 

சட்டமன்ற உறுப்பினர்கள் ( எம்எல்ஏக்கள்)  ஓட்டு மதிப்பு கணக்கிடும் முறை:

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டின் மதிப்பானது, குறிப்பிட்ட மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழக எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும், உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் மாறுபடும்.

ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பானது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதனை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் தொகையே ஓட்டின் மதிப்பாகக் கருதப்படும்.

அதாவது,  ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை/ மாநிலத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000 
உதாரணமாக, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 4,11,99,16 (உதாரணமாக). மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதன்படி தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு – 4,11,99,168/234*1000=176.06. 

தமிழக எம்எல்ஏக்களின் ஓட்டுகள் மொத்த மதிப்பு 176.06 * 234 = 41,198 (41198.04).

எம்எல்ஏக்கள் ஓட்டு அடிப்படையில் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு அதிகமாகும்.

குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட சிக்கிம் மாநில எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு நாட்டிலேயே குறைவானது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் (எம்பி) ஓட்டு மதிப்பு கணக்கிடும் முறை: 

மாநில எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பினை, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு எம்பியின் ஓட்டு மதிப்பாகும்.

மக்களவை மற்றும் மாநிலங்களைவையை சேர்த்து மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 776 ஆகும்.

நாட்டிலுள்ள மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4,120 ஆகும். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,474. அதன்படி கணக்கிட்டால் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.

குடியரசுத் தலைவரை (ஜனாதிபதி) தேர்ந்தெடுக்கும் முறை: 

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு தேசிய தலைநகர் மற்றும் மாநில தலைநகரங்களில் நடைபெறும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் நிலையில், வாக்காளர்களின் முதல் தேர்வு அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர்.

வேட்பாளர்களின் எண்ணிக்கை இரண்டைத் தாண்டும்பொழுது வாக்காளர்களின் முதல் தேர்வு அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிப்பர்.

இவர்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,98,882 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் தேவை. அதாவது, 5,49,442 வாக்குகள் பெற்றால் வெற்றிபெற்று விடலாம்.

கட்சிகளின் ஆதரவு நிலை:

தற்போது ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு 5,32,03‌7 வாக்குகள், அதாவது 48.64 சதவீத வாக்குகள் உள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற ‌அந்தக் கட்சிக்கு தேவைப்படுவது 14,40‌5 வாக்குகள் மட்டும்தான்.

அதேபோல எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையில் கூடும் மதச்சார்பற்ற அணிக்கு 35.07 சதவீத வாக்குகள் உள்ளன.

மாநில கட்சிகளான அதிமுக (தமிழகம்), பிஜேடி (ஒடிசா), டிஆர்எஸ் (தெலங்கானா), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஆந்திரா), ஆம்ஆத்மி (டெல்லி மற்றும் பஞ்சாப்), ஐஎன்எல்டி (ஹரியானா) ஆகிய 6 கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 13.06 சதவீத வாக்குகள் உள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இந்த 6 கட்சிகளின் ஆதரவைப் பெறும் நிலையில், அந்த கூட்டணியின் வாக்குகள் சதவீதம் 48.53ஆக மாறும்.

இது பாஜக கூட்டணியை விட 0.09 சதவீதம் மட்டுமே குறைவாகும். அதனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த கட்சிகள் முக்கிய பங்காற்றும் என்று கணிக்கப்படுகிறது.