தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

சென்னை:

தமிழகத்தில் மட்டும் ஜிஎஸ்டி இணையதளத்தில்  8 லட்சத்து 95 ஆயிரத்து 535 பேர் பதிவு செய்திருப்பதாக தமிழக வணிகவரித்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிழ்நாடு சட்டப்பேரவை மானிய தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி 110ன் கீழ்  தமிழ் வளர்ச்சித்துறை குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் இன்று  வணிகவரித்துறையின் கொள்கை விளக்க குறிப்பு வைக்கப்பட்டது.

அதில், நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் மட்டும்,  8 லட்சத்து 95 ஆயிரத்து 535 பேர் சரக்கு மற்றும் சேவை வரி இணையதளத்தில் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஜிஎஸ்டிஐஎன் (GSTIN) எனப்படும் வரி எண், ஜிஎஸ்டி இணையதளத்தின் வாயிலாக கடந்த மார்ச் 31ந்தேதி வரையில்  3 லட்சத்து 12 ஆயிரத்து 517 வரிசெலுத்துநர்கள் பெற்று, வரி செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல ஜிஎஸ்டி குறித்து ஆர்டிஐ மூலம் 1147 மனுக்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 1124 மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டிக்கு எதிராக தமிழகத்தில் வணிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்த நிலையில், தற்போது அதிக அளவில் வணிகர்கள் ஜிஎஸ்டி இணைய தளத்தில் பதிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed