மிழ்த் திரையுலகில் மனோரமாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறப்பவர் கோவை சரளா.  1983ல் வந்த பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சிறிய வேடத்தில் நடித்து தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர்… தற்போது 750 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். கரகாட்டக்காரன் இவருக்கு உச்சகட்ட புகழைக் கொடுத்தது.  சதி லீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்துவிட்டார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த இவருக்கு, திடீரென வாய்ப்புகள் குறைந்தன. மீண்டும் 2011ல் காஞ்சனா படத்தின் மூலம் மீண்டும் பரபப்பாக வலம் வந்தார்.

55 வயதாகும் கோவை சரளா, திருமணமே செய்துகொள்ளவில்லை.  காரணம் கேட்டால், “என்னுடன் பிறந்தவர்கள்  4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன். இவர்களை வாழ்க்கையில் செட்டில் செய்ய.. திருமணம் செய்துவைக்க வேண்டிய நிலை. அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்குள் எனக்கு காலம் கடந்துவிட்டது. என் உடன் பிறந்தவர்களின் குழந்தைகளையே என் குழந்தைகளாக பாவிக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார் சிரித்தபடியே.

கோவை சரளாவுக்கு “நகைச்சுவை” என்பதைக் கடந்து, “ஹீரோயின்” முகமும் உண்டு.

ஆம்.. அவர்  ஏழை குழந்தைகள் பலரை தனது சொந்த செலவில் படிக்கவைத்து வருகிறார். அதேபோல முதியோர்கள் பலருக்கும் தன்னாலான உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார்.

இது பற்றி கேட்டால், “மனிதர்க்கு மனிதர் உதவி ஒத்தாசையாக இருப்பது இயல்புதானே.. இதை எல்லாம் வெளியில் சொல்ல வேண்டுமா” என்கிறார், இந்த ஹீரோயின்.