லட்சுமி யாரோட ரசிகர் தெரியுமா?

--

 

லட்சுமி பிரியா(தான்!)

மூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் “லட்சுமி” குறும்பட நாயகி லட்சுமி பிரியாவிற்கு  இப்போது ஏகப்பட்ட ரசிகர்கள்.

அது இருக்கட்டும்.. அவர் யார் ரசிகை தெரியுமா?

தீவிர கமல் ரசிகையாம் அவர்.

கமலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவாராம் லட்சுமி. அதாவது கமல் படத்தில் போட்ட கெட்டப்புகளை தானும் போட்டு அதை படமமெடுத்துவைத்துக்கொள்வாராம். ட்விட்டர் சமூகவலைதளம் வந்தபிறகு அதிலும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.

சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளிற்காக அவர் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

துரோணாச்சாரியாருக்கு அவரின் ஏகலைவன்களில் ஒருவரது சமர்ப்பணம் என்று அந்த வீடியோவிற்கு தலைப்பு வைத்து பதிவிட்டிருக்கிறார்  லட்சுமி பிரியா.

கமல்ஹாசனின் அன்பே சிவம் கெட்டப்பில் தொடங்கி பல திரைப்படங்களை வரிசைப்படுத்தி அந்த தோற்றத்திற்கு ஏற்ப தானும் மேக்கப் போட்டு அந் படங்களை பதிந்திருக்கிறார்.

இந்தப் படங்களை நடிகர் கமல்ஹாசனிட்ம் நேரிலும் அளித்துள்ளார்.

 

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்று லட்சுமி பிரியா தன்னுடைய பிரியத்தை கமல்ஹாசனுக்கு டெடிகேட் செய்திருக்கிறார்.

திரைத்துறையைப் பொறுத்தவரை கமல் ரசிகை என்றால்.. விளையாட்டில் கிரிக்கெட் வீரர் தோணியின் ரசிகையுாம். அது மட்டுமல்ல… இவரும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாம்.