2.o. படம் பற்றி ரஜினியின் ஃபைனல் கமெண்ட் என்ன தெரியுமா?

ங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து ரஜினிகாந்த் ரஜினிகாந்த்தின் இறுதிகட்ட கமெண்ட் என்ன தெரியுமா?

இன்று ஹைதராபாத்தில் நடந்த 2.o பிரமோஷன் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “எந்திரன் படத்தை 3டியில் மாற்ற முயன்றும் முடியவில்லை. ஆனால் 2.0 படம் 3டியில் வெளியாகிறது. 2.0 படக் கதையை ஷங்கர் என்னிடம் கூறியதும் இதை படமாக்க முடியுமா என்ற சந்தேகமே எனக்கு ஏற்படவில்லை.  ஷங்கரால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

கதை மற்றும் பிரமாண்டத்திற்காக பாகுபலி படம் உலக அளவில் பேசப்பட்டது. அதே போல  2.0 புதிய தொழில்நுட்பத்திற்காக பேசப்படும் படமாக இருக்கும்.

1975ம் வருடம் என் முதல் படமான அபூர்வராகங்கள் வெளியானது.  அதைப் பார்க்க இருந்த அதே ஆர்வம் 43 வருடங்களுக்கு பிறகு 2.0 படத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.  படத்தில் 45 சதவீதம் விஷுவல் எஃபெக்ட் உள்ளது. ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் வெறும் சாம்பிள் தான். படத்தை பார்த்து ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். சினிமா துறைக்கே பெருமை சேர்க்கும் படமாக 2.0 விளங்கும் 3டி படம், 4டி ஒலி என்று தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை 2.0 படம் அளிக்கும்.  அதனால் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான்   எஃபெக்ட் கிடைக்கும். 2.0 படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

பிறகு இறுதியாக, “2.o படத்தை பார்த்துவிட்டு மக்களே  இதைப்பற்றி  விளம்பரம் செய்வார்கள். அந்த அளவுக்கு படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன!” என்று பைனல் கமெண்ட் கொடுத்திருக்கிறார் ரஜினி.