‘ல‌ட்சுமி’ என்ற குறும்படம் பற்றிய விவாதங்கள்தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். படத்தைப் பற்றி இருவேறுவிதமான கருத்துக்கள் இருந்தாலும, அனைவருமே வியப்பது, லட்சுமியாக நடித்த லட்சுமி ப்ரியாவின் இயல்பான நடிப்பைத்தான்.

கீழ் நடுத்தர குடும்பப்பெண்ணாக தனது ஆதங்கத்தை வெளிக்காட்டுவது, இன்னொரு ஆண் புகழும்போது முகத்தில் காட்டும் மகிழ்ச்சியான வெட்கம்…  இப்படி அசத்தியிருக்கிறார் லட்சுமி ப்ரியா.

 

ஆனாலும் இந்த குறும்படத்தில் லட்சுமி ப்ரியா நடித்திருக்கம் நெருக்கமான காட்சி பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. வேறு எந்த நடிகையும் இப்படி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

ஆனால் லட்சுமிப்ரியா இப்படி அதிரடியாக நடிப்பது புதிது அல்ல.  ஏற்கெனவே  நடித்த ஒரு படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் அசால்ட்டாக நடித்திருக்கிரார்.

அந்தப் படம் பெயர் களைவு.  இதில் ஹரிஷ் உத்தமனும் நடித்திருந்தார். இதில் ரொம்பவே மார்டன் பொண்ணாக காட்சியளிக்கும் லட்சுமி, தெரியாத ஆடவர் ஒருவருடன் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றது.

அதையும்தான் பார்த்திருங்களேன்..