கொரோனா வைரசின் எடை வெறும் 8 மில்லி கிராம் மட்டும்தான் என்கிறார் பிரபல கணிதவியல் நிபுணரான மாட் பார்க்கர். இவர்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து, ஆராய்ச்சி ஒன்றை நடத்திய நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

கணிதவியல் நிபுணர்மாட் பார்க்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து, ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அதில், உலகில் உள்ள ஒட்டுமொத்த கொரோனா வைரசின் எடை, வெறும் 8 மில்லி கிராம் என்று தெரியவந்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பேசிய மாட் பார்க்கர், கொரோனா வைரஸ் என்பது மனித செல்களை விட, மில்லியன் கணக்கில் சிறியவை என்று தெரிவித்ததுடன்,  ஒட்டுமொத்த கொரோனா வைரசையும், ஒரு ஸ்பூனில் அடக்கி விடலாம் என்று கூறி உள்ளார்.

இந்த கண்ணுக்குத் தெரிய நுண்ணிய வைரஸ் கிருமிதான்  உலகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவலில்,  ஒரு கொரோனா வைரஸ் எடை 0.85 அட்டோகிராம் என கூறப்பட்டது. ( corona virus is 0.85 autograms then 0.00000000000000000085 grams.) ஆட்டோ என்றால் 0.00000000000000000085 கிராம். 0.85 கிராம் எடையுள்ள ஒரு துகளை எடுத்துக்கொள்வோம், அதை 10 லட்சம் பகுதிகளாகப் பிரிக்கிறோம், அதில் ஒரு பகுதியை எடுத்து 10 மில்லியன் பகுதிகளாகப் பிரிக்கிறோம், துகள் எடை ஒரு கொரோனா வைரஸ் ஆகும். எடை 0.85 அட்டோகிராம்.

இந்த நுண்ணுயிர் வைரஸ் ஒரு மனிதனைப் பாதிக்கும்போது, அது (மனித) உடலில் குறைந்தபட்சம் 70 பில்லியனைக் கொண்டுள்ளது, அது (மனித) அறிக்கை கொரோனா நேர்மறையாக இருக்கும்போது, அதில் உள்ள 70 பில்லியன் கொரோனா வைரஸ்கள் எடை 0.0000005 கிராம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது  ஒட்டுமொத்த கொரோனா வைரசின் எடை வெறும் 8 மில்லி கிராம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளது.