டில்லி:

த்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்னவென்று தெரியுமா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரி சுட்டிக்காட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற பிரஸ் மீட் படத்தை வெளியிட்டு, இதுதான் செய்தியாளர் சந்திப்பு என்று தெரிவித்து உள்ளார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு

மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட வில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. பிரத்யேகமாக சில செய்தியாளர்களை மட்டுமே வரும் பிரதமர் மோடி திறந்த வெளியில் அனைத்து செய்தியாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு மோடி செவிமடுக்காமல் எப்போதும் போலவே மவுனசாமியாகி விடுகிறார்.

இந்த நிலையில்,  மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த மனீஷ் திவாரி பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக மாண்புமிகு மன்மோகன் சிங் இருந்தபோது செய்தி யாளர்கள் சந்திப்பு ஒரு மாநாட்டைப் போல இருந்தது என்று தெரிவித்து உள்ளார்.

ஒரு நாட்டின் பிரதமர் செய்தியாளர்களை சந்திக்கும்போது, நமது நாட்டின்  செய்தியாளர்களுடன் சர்வதேச நாடுகளின் செய்தியாளர்களும் வருவார்கள். இதன் காரணமாக செய்தியாளர்கள் கூட்டம் ஒரு மாநாட்டைபோல நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் அந்த மண்டபமே நிரம்பி வழியும் என்றும், செய்தியாளர்களில் பாகுபாடு பார்ப்பது கிடையாது. சுதந்திரமாக அவர்கள் தங்களது பணியை செய்வார்கள் என்று குறிபிட்டுள்ளார்.

மன்மோகன் சிங்குடன் மனீஷ் திவாரி

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறும்போது, நான் பத்திரிகையாளர்களைப் பார்த்து பயப்படவும் இல்லை, அமைதியான பிரதமராகவும் இருந்தது இல்லை என்று பிரதமர் மோடியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும் தான் பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து சந்தித்து பேட்டி கொடுத்து வந்தேன். நான் வெளிநாட்டுப் பயணம் செல்லும் போது பத்திரிகையாளர்களை உடன் அழைத்துச் சென்று இருக்கிறேன், திரும்பி வரும்போது, பத்திரிகை யாளர்களைச் சந்தித்து பேட்டியும் அளித்திருக்கிறேன் என்றும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.