ஜி.எஸ்.டி. வரியால் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் தெரியுமா?

டில்லி,

த்திய அரசு ஜூலை முதல் தேதியில் இருந்து புதிய சரக்கு மற்றும் சேவை வரியை, அமல்படுத்த இருக்கிறது.

1200க்கும் அதிகமான பொருட்கள்-சேவைகளுக்கு வரிகள் 5 முதல் 28 சதவிகிதம் வரை விதிக்கப்பட்டுள்ளன. .

பல மாநிலங்கள், முக்கியமான பொருட்களை குறைவான வரி கொண்ட பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

81 சதவீத பொருட்கள் 18 சதவீதம் வரி வரம்பிற்குள் வருவதாக வருவாய்த் துறைச் செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்தார்.

அடிப்படை உணவு வகைகள், ( பால், உப்பு, அரிசி போன்றவை) பூஜ்யம் வரி என்ற வரம்பிற்குள் வருகின்றன.  அதே நேரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கான வரி விகிதம் என்னும் இறுதியாக்கப்படவில்லை.

பூஜ்ஜியம் வரி (வரி விதிக்கப்படாத பொருட்கள்)

• பால்

• தானியங்கள்

• பழங்கள்

• உப்பு

• அரிசி, அப்பளம், ரொட்டி

• விலங்குகளுக்கான தீவனம்

• காண்டம்கள்

• கருத்தடை மருந்துகள்

• புத்தகங்கள்

• விறகு

• வளையல்கள் (விலை குறைவானவை)

ஐந்து சதவிகித வரி வரம்பிற்குள் வரும் பொருட்கள்

• தேநீர், காபி

• சமையல் எண்ணெய்

• பிராண்டட் அரிசி

• சோயாபீன்ஸ், சூரியகாந்தி விதைகள்

• பிராண்டட் பாலாடைக்கட்டி

• நிலக்கரி (டன் ஒன்றுக்கு ரூ 400 லெவி உடன்)

• மண்ணெண்ணெய்

• வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (எல்.பி.ஜி)

• உடலுக்கு நீர்ச்சத்து தரும் ஓ.ஆர்.டி

• வடிவியல் பெட்டி (ஜாமெட்ரி பாக்ஸ்)

• செயற்கை சிறுநீரகம்

• கை பம்புகள்

• இரும்பு, எஃகு, இரும்பு கலந்த உலோகங்கள்

• தாமிர பாத்திரங்கள்

• துடைப்பம்

12 சதவிகித வரி வரம்புக்குள் வரும் பொருட்கள்

• உலர் பழங்கள்

• நெய், வெண்ணெய்

• தின்பண்டங்கள்

• மாமிசம் மற்றும் மீன்

• பாலால் தயாரிக்கப்பட்ட பானங்கள்

• பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்

• பயோ கேஸ்

• மெழுகுவர்த்தி

• அனஸ்தீசியா மயக்க மருந்து

• ஊதுபத்தி

• பல் துலக்கும் பொடி

• மூக்கு கண்ணாடி லென்ஸ்

• குழந்தைகளுக்கான ஓவிய புத்தகங்கள்

• நாட்காட்டிகள்

• நட்டு, போல்டு, திருகுகள்

• டிராக்டர்

• மிதிவண்டி

• எல்.பி.ஜி விளக்கு

• விளையாட்டுப் பொருட்கள்

• கலைப் பொருட்கள்

18 சதவிகித வரி வரம்பிற்குள் வரும் பொருட்கள்

• சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

• பதப்படுத்தப்பட்ட பால்

• உறையவைக்கப்பட்ட காய்கறிகள்

• தலையில் பூசும் எண்ணெய்

• சோப்

• ஹெல்மெட்டுகள்

• நோட்டு புத்தகங்கள்

• ஜாம்கள், ஜெல்லி

• சாஸ், சூப், ஐஸ் கிரீம், உடனடி உணவு கலவைகள்

• பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர்

28 சதவிகித வரி வரம்புக்குள் வரும் பொருட்கள்

• கார்

• இருசக்கர வாகனங்கள்

• சாக்லேட், கோகோ வெண்ணெய், கொழுப்புகள், எண்ணெய்கள்

• பான் மசாலா

• குளிர்சாதன பெட்டி

• வாசனை திரவியங்கள், டியோடரண்ட்

• ஒப்பனை பொருட்கள்

• சுவர் பட்டி

• சுவருக்கான பெயிண்ட்

• பற்பசை

• சவர கிரீம்

• சவரம் செய்யும் ரேசர்

• திரவ சோப்

• பிளாஸ்டிக் தயாரிப்புகள்

• ரப்பர் டயர்கள்

• தோல் பைகள்

• மார்பிள், கிரானைட், பிளாஸ்டர், மைக்கா

• தடிமனான கண்ணாடி

• பாத்திரம் கழுவும் இயந்திரம் (டிஷ் வாஷர்)

• பியானோ

• கைத்துப்பாக்கி