சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலுவுக்கு என்ன வேலை தெரியுமா?


ராஞ்சி:

மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவிற்கு சிறையில் தோட்ட பராமரிப்பு வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா ஆட்சி நடைபெற்றபோது  மாட்டுத்தீவனம் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டதாக அப்போதைய முதல்வல் லாலு பிரசாத்யாதவ் மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இந்த   ஊழல் வழக்கில்  லாலு பிரசாத் யாதவுக்கு  மூன்றரை வருட சிறை தண்டனையும், 5 லட்சம் அபராதமும் விதித்து  ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதைத்தொடர்ந்து லாலு ராஞ்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வேலை குறித்து  தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், லாலுவுக்கு சிறையில் தோட்ட பராமரிப்பு பணி வழங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வேலைக்கு ஒரு நாள் கூலியாக ரூ.93 வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.