லச்சேரி

ந்தியாவில் முதன் முதலாகக் கிறிஸ்துமஸ் கேக் செய்யப்பட்டது குறித்த செய்தி இதோ

உலகெங்கும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.    இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனையில் கலந்துக் கொண்டனர்.   புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.   அத்துடன் இனிப்பு பலகாரங்களை அக்கம் பக்கத்தினருக்கு அளித்தனர்.

இதில் முக்கிய இடம்  பிடித்தது கேக் ஆகும்.  கேக் என்பது இந்திய நாட்டுப் பண்டம் இல்லை  எனினும் தற்போது இந்திய உணவுப் பண்டங்களில் ஒன்றாகி விட்டது.   இந்த கேக் எங்கு எப்போது முதல் முதல் தயாரிக்கப்பட்டது என்பதை இங்கு காண்போம்.

பிரிட்டிஷ் ஆட்சி செய்து வந்த 1880 ஆம் வருடம் கேரளாவில் உள்ள தலச்சேரி என்னும் ஒரு சிறிய கடற்கரை நகரில் மாம்பல்லி பாபு என்பவர் வசித்து வந்தார்.  இவர் எகிப்தில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத்துக்காக, பால், தேயிலை, ரொட்டி ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வந்தார்.   அவர் பர்மாவில் இருந்து வந்தவர்.  அவர் அங்கு பேக்கரி வைத்திருந்தார்.  எனவே கேரளாவில் மலையாளிகளுக்காக பேக்கரி ஒன்றைத் தொடங்கி விற்பனை செய்து வந்தார்.

ஏற்கனவே இருந்த மற்றொரு பேக்கரி முழுவதும் ஆங்கிலேயர்களுக்காக மட்டுமே இயங்கி வந்தது.   தனது பேக்கரிக்கு ராயல் பிஸ்கட் பேக்டரி என பெயர் வைத்த பாபு அங்கு 40 விதமான பிஸ்கட்டுகள் ரஸ்குகள், ரொட்டி, பன் ஆகியவற்றைச் செய்து வந்தார்.    அப்போது ரொட்டி மாவு புளிப்படைய உள்ளூர் கள் உபயோகம் செய்து வந்தார்.  அதன் பிறகு பிரிட்டனில் இருந்து ஈஸ்ட் வாங்கி பயன்படுத்த தொடங்கினார்.

கடந்த 1883 ஆம் வருடம் கிறிஸ்துமஸ் சுக்கு சில தினங்கள் முன்பு முர்டோச் பிரவுன் என்னும் ஆங்கிலேயர் இவர் கடைக்கு வந்தார்.  பிரவுன் அதே பகுதியில் ஏலக்காய் பயிரிட்டு வந்தார்.  அவர் பாபுவிடம் தாம் இங்கிலாந்தில் இருந்து வாங்கி வந்த பிளம் கேக்கை அளித்து அதைச் சாப்பிடச் சொன்னர்.  அதன் பிறகு அதைப் போல் பாபு செய்வாரா எனக் கேட்டார்.   இந்தியாவுக்கு வந்த முதல் கேக் அது என்பதால் பாபாவுக்கு அது அதிசயமாக இருந்தது.

பிரவுன் அந்த கேக் எவ்வாறு செய்ய வேண்டும் என விவரித்து,  அதற்குத் தேவையான பொருட்களான கோகோ, உலர் பழங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாபுவுக்கு அளித்தார்.  பிரவுன் கேட்டுக் கொண்டபடி பாபு கேக் தயாரித்துக் கொடுத்தார்.   ஆனால் அப்போது அது ஒரு சரித்திர நிகழ்வு என்பதை பாபு அரிந்திருக்கவில்லை

1884 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி இந்தியாவில் செய்யப்பட்ட முதல் கிறிஸ்துமஸ் கேக்கை பிரவுனுக்கு பாபு கொடுத்தார்.  அதைச் சாப்பிட்ட பிரவுன் தாம் சாப்பிட்டதிலேயே மிக ருசியான கேக் இது எனத் தெரிவித்து அவருக்கு மேலும் 12 கேக்குகள் செய்ய ஆர்டர் அளித்தார்.   இந்த தகவல் பரவவே, உள்ளூர் வாசிகளும் கேக் வாங்கத் தொடங்கினர்.  இவ்வாறு கேரளா மட்டுமின்றி தென் இந்தியா முழுவதும் கேக் விற்பனை பரவி கேக் தயாரிப்பில் தலச்சேரி முதல் இடத்தை பிடித்துள்ளது.