உலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா?

சிங்கப்பூர்,

லகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட், சிங்கப்பூர் பாஸ்போர்ட் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. உலக தர வரிசையில் முதலாவது இடத்தை பெற்றுள்ள முதல் ஆசிய நாடு சிங்கப்பூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் விசா இல்லால் 159 நாடுகளுக்கு செல்லக்கூடிய வகையில் பாஸ்போர்ட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் மெர்சல் திரைப்படத்தில் சிங்கப்பூரின் ஜிஎஸ்டி குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உலக அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சிங்கப்பூரின் பாஸ்போர்ட் பற்றிய தகவல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

உலக நாடுகளின் பாஸ்போர்ட் தரத்தை குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆர்டான் கேபிடல் இந்த ஆண்டுக்கான  தரவரிசை பட்டியலை  வெளியிட்டுள்ளது.

அதில், விசா இல்லாமலே பயணம் செய்ய அனுமதி வழங்கும் முதல் 10 பாஸ்போர்ட்டுகள் பட்டியலை கூறியுள்ளது.

அந்த வரிசையில், 159 பாய்ண்ட் எடுத்து  சிங்கப்பூர் 159 முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த நாட்டின்  பாஸ்போர்ட் மூலம்  விசா இல்லாமலே 159 வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்.

158 பாய்ண்டுடன்  ஜெர்மனி நாடும் இரண்டாவது இடத்தையும், 154 பாய்ண்ட் பெற்று அமெரிக்கா 6 வது இடத்திலும் உள்ளது.

இந்தியா 51 பாய்ண்ட் மட்டுமே பெற்று 75வது இடத்தில் இருக்கிறது.

இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.